கவிதைத் தலைப்பு -இன்று புதிதாய் பிறந்தோம்
எதற்குப் பிறந்தோம் என எண்ண வேண்டாம் எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து அசதியில் தினம் தூக்கங்கள் போகும் வாழ்வின் பாடம் இன்ப துன்பம் விலக வேண்டாம் எதிர்த்துத் துணிந்திடு எண்ணங்கள் எங்கும் சென்று வரலாம் எதார்த்தம் என்னவென்று புரிந்து செயல்படு மேற்கில் உயரம் கிழக்கில் சரிவு ஆற்றின் வாழ்வில் அறிந்த ஒன்று மாலைகள் சூடி மகுடம் கொட்டிட மாற்றம் என்பது நிச்சயம் வேண்டும் நடக்க நடக்க காலும் தேயும் கடக்க கடக்க பாதை பிறக்கும் முட்கள் நிறைந்த இவ்வுலகினில் குத்தல் இன்றி செல்லப்பார் காற்றின் திசை தடம் மாறும் கலங்கல் இல்லா புயல் ஏது புல்லாகப் பிறந்தால் மிதிபடுவோம் விறகாகப் பிறந்தால் எரிக்கப்படுவோம் மனிதனாகப் பிறந்தால் காயப்படுவோம் நேற்று அனைவரும் தடுமாறி விழுந்தோம் இன்றோ அனைவரும் புதிதாகப் பிறந்தோம்.