இரவின் முகவரி

 சில மணிநேரம் கண் விழித்துப் பலனில்லை

பல மணி நேரம் விழி மூடியும் தெரியவில்லை 

எங்கு சென்றுள்ளாய் இரவே

முகவரியினை வெளிச்சமாக காட்டு 

ஓயாது உன்னை நினைத்திருப்பதால்  

ஓய்விற்கு இங்கு இடமில்லை

கானல் நீராய் காட்சி அளித்து

பாலையில் மறைந்திருப்பாயோ

கானகத்தில் கலந்திருந்தது

மாலையில் புலப்படுவாயோ

தீம்புனல் வாசம் வீச

வைகறையில் வந்து நிற்பாயோ

வரையிடம் வரம்பு மீற

யாமத்தில் யாழிசைக்க காத்துள்ளாயோ

உன் முகவரி எனக்கு வேண்டும் 

உன்னிடம் பேச எனக்கு ஏராளம் தோன்றும்

விருப்பத்துடன் விழைகிறேன் உன் முகவரிக்காக.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்த்தேன்

தாய்த் தமிழே!

மின் வெட்டு