தாய்த் தமிழே!

 தரணியும் தலைவணங்கும் தாய்த் தமிழே 

தலைநிமிர்ந்து தழைத்தோங்கும் தனித்தமிழே

செறுவிடை ஏந்தி நின்ற செழுந்தமிழே 

செருக்குடன் மேலெழுந்த செந்தமிழே

தீண்டத் தீண்டத் திகட்டாத தீந்தமிழே

தீண்டல்கள் பெற்று வந்த தொல் தமிழே

வஞ்சகம் உள்நுழையா வளந்தமிழே

விருந்தினர் வியந்து போற்றிய மருந்தமிழே

பல் சான்றோர் பாடித் தந்த பைந்தமிழே

பல்லாண்டாய் படையலிடும் பழந்தமிழே

நஞ்சினை விரட்டியடிக்கும் நறுந்தமிழே

நன்றொரு சமூகம் தந்த நற்றமிழே

பெதும்பைகள் பேணி வளர்த்த பூந்தமிழே 

பெண்ணிற்கு மேன்மை தந்த பொன்தமிழே

இளங்கவிகள் இணைந்து போற்றும் இளந்தமிழே

இளங்கோவன் கையில் அமர்ந்த இன் தமிழே

குறளெனும் குடை தந்த குறுந்தமிழே

குவியலாய் குவிந்து கிடக்கும் முத்தமிழே

கடலினுள் மூழ்கிக் கிடக்கும் குமரித் தமிழே

காலத்தை வென்று நிற்கும் கன்னித்தமிழே

உறவுகளை இழந்து தவிக்கும் ஈழத்தமிழே

யாழிசை உணர்வளிக்கும் என் அருந்தமிழே!என் பெருந்தமிழே!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்த்தேன்

மின் வெட்டு