மின் வெட்டு

 அமைதியான தெருவில் அலறலை எழுப்பி

அலரைப் பெற்றனர் பிஞ்சு நெஞ்சுகள்

நட்சத்திரம் புவியிடம் நெருக்கமாக வந்து

முத்தம் கேட்டு கெஞ்சி நிற்க

பசுவின் பாலைத் திருட

பூனைகள் வெட்சிப் பூவுடன் வீட்டினுள் நுழைய

கரந்தைப் பூவைச் சூடி கட்டையுடன் வீட்டார் நிற்க

தலைவனுக்காக காத்திருக்கும் இல்ல வாயில்கள்

மெல்ல கண்ணீர் சிந்தும்

புரியாத புரிதல்கள் 

மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் 

மின்மினிப் பூச்சிகள் என

இப்படியா வந்து செல்கிறது மின்‌வெட்டு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்த்தேன்

தாய்த் தமிழே!