தமிழ்த்தேன்

 தேன் சுவை தித்திக்க உன்

குறுந்தொகையை நீ தருவாயாக

எம்மின வரலாறு புரிந்திட

இரு நானூறுகளை ஓதுவாயாக

நல்வாழ்வு பெற்று புகழ் ஊன்றிட

குறளினை கொடுப்பாயாக

பக்தி நனிச் சொட்டி மயங்கி திரிந்திட

இறையடிகளை எழுப்புவாயாக

மொழியினை ஏந்தி நின்று செல்ல

இளைய இலக்கணம் பதிப்பாயாக

போரும் பொறாமையும் முடிவு பெற்றிட

அறத்தினைக் கறந்திடு

கேட்டன கொடுத்துச் செல்

என்றுமழியா என் இளந்தமிழே.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த் தமிழே!

மின் வெட்டு