கடற்கரை

 கடலானது உன் பாதங்களைத் தொழ

கலக்கமின்றி வந்து செல்லும் 

சூரியன் சங்கமிப்பதை நீ பார்ப்பதை போல் 

தமிழ் சங்கமித்ததை நீ பார்த்திருப்பாயா

கடலினுள் சென்ற பரதவருக்காக

நெய்தல் மகள் சிந்திய கண்ணீர் உன்னிடம் ஏராளம்

ஏற்பாடு வேளையில் உன் மண்வாசம் தேன் சுவாசம்

அங்கே சட்டியில் கொதிக்கும் கடல் மீனும்

நெருப்பில் சுட்டுத்தள்ளிய கெளுத்திக் கருவாடும்

என்றென்றும் அயலவர்க்கு அமிர்தமே!

அலுப்பில் நிற்கும் படகுகளெல்லாம் 

அண்டைப் படகை நலம் விசாரிக்கும்

பங்காளி சண்டையிடும் மீன் வலைகள்

பளபளப்பாக மாற்றி தந்திட கூச்சலிடும்

வளைகாப்பு நடந்து முடிந்த நெய்தல் மங்கை

வாயிலோரம் முகம் சுருங்கி நின்றிருப்பாள்

இப்படியாக பற்பல எதிர்பார்ப்புகளை 

ஏந்தி நிற்கிறது கடற்கரை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்த்தேன்

தாய்த் தமிழே!

மின் வெட்டு