நாட்டுப்புறப்பாடல்-ஏர்
ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா
மேல கீழ மண்ணு புரள
மேற்கு தெச கொக்கு மெரள
ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா
கைவுள்ள நெல்லுமணி காணாம போறதுக்கு
காட்டு கத்து கத்தி கிட்டு காகாவ விரட்றதுக்கு
ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா
அத்த பொண்ணு மாமன் பொண்ணு
மொத்தம் சேந்து நாத்து நட
சுத்தி சுத்தி வந்து கிட்டு மூஞ்சப் பாத்து சிரிச்சிக்கிட
ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா
அத்த வந்து களை புடுங்க
அக்கா புருஷன் வரப்பு வெட்ட
ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா
மாம வேர்வையில நெல்லு மொளைக்க
மாம தம்பி பொண்ணு சடங்கு கேக்க
ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா.
கருத்துகள்
கருத்துரையிடுக