விடியலுக்காய் மடியும் இனம்
தீந்தமிழ் கேட்டுத் திகட்டிய இடம்
அந்நியன் வரவால் மாறியது தடம்
மூத்தோர் தந்த முக்காணி நிலம்
மூடன் குரலால் முடங்கிற்று பலம்
உரிமை மீட்க எழுந்தன புலிகள்
போராடிப் போராடிப் பெற்றோம் வலிகள்
வீரத் தமிழச்சிகள் வில்லினை ஏந்தினர்
இனத்தினை காக்க எதற்கும் துணிந்தனர்
முதுகில் குத்தி வீழ்த்தினர் நம்மை
நாம் பழகியதோ வீரத்தின் செம்மை
அரிய ஏடுகள் தீயில் கருகின
வீரமுள்ள குருதி குழிகளில் வழிந்தன
அண்டையில் வீற்றுள்ள அளவிலா சொந்தங்கள்
என்னாயிற்று கேட்க நாதியில்லா பந்தங்கள்
வெள்ளையன் தந்தான் அங்கீகாரம் அவர்களிடத்தில்
அண்டைச் சகோதரனுக்கோ ஆட்சி மோகம்
விடியலுக்காய் மடிந்தது நம்மினம்
மீட்டெடுக்கப் பாடிடு தினமொரு கானம்
-கவிஞர். பெ.சக்திவேல்
கருத்துகள்
கருத்துரையிடுக